கொழும்பு செட்டியார்தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் மூலமாக முதற்தடவையாக தாலிக்கு பொன் உருக்கும் புனித இடமொன்று பழமுத்து முத்துக்கருப்பன் தங்க நகைமாளிகையில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறிப்பாக ஆரம்ப காலத்தில் ஆண் பெண் பெயர்களை தலை ஓலையொன்றில் எழுதி அதை ஒரு மஞ்சள் கயிற்றினால் சுருட்டி பெண்கள் கழுத்தில் கட்டி வந்தனர். பின்னாளில் அது தாலி என அழைக்கப்பட்டது.
இவ்வாறான பழக்கத்தில் ஆரம்பித்த தாலியை செய்யும் போது சரியான நாள், நட்சத்திரம், நேரம் ஆகியவற்றை கவனிக்கும் அதேநேரம் ஆகம முறைப்படி தாலி செய்யும் வழிமுறையை எம்முன்னோர்கள் எமக்கு காட்டியுள்ளனர்.
பொன்னுருக்கலுக்காகவே பிரத்தியேகமான பொன்னுருக்கு மணவறையை பழ முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் அமைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் இலகுவாக அமைந்துள்ளது.
கொழும்பில் பொன்னுருக்கலுக்காகவே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதல் பொன்னுருக்கு மணவறை இதுவாகும்.
திருமணத்தில் பொன்னுருக்குதலுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கொழும்பில் வீடுகளில் பொன்னுருக்குதல் செய்யப்படும் போது அதற்கான வசதிகளும் புனிதத் தன்மையும் குறைவாகவே காணப்படுகிறது.
இதைக் கருத்திற் கொண்டே பொன்னுருக்கு மணவறை பழ முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் அமைத்திருக்கிறது.
இப்போது திருமணத்திற்கு முன்பாக புகைப்படம் எடுக்கும் Pre-Shoot கலாச்சாரம் பரவலாக காணப்படுகிறது. இந்த Pre-Shoot நிகழ்வுகளையும் பொன்னுருக்குதலில் இருந்தே ஆரம்பிக்கலாம்.
பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸின் பிரத்தியேகமான பொன்னுருக்கு மணவறையின் திறப்பு விழாவை இன்று வெள்ளிக்கிழமை(16) முற்பகல் செட்டியார் தெருவில் அமைந்துள்ள எமது வர்த்தக நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ் சமூகத்தின் பாரம்பரிய விழுமியங்களை பாதுகாத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எமது பிரத்தியேகமான பொன்னுருக்கு மணவறையின் திறப்பு விழாவில் பலரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து தங்கநகை மாளிகையின் பொது முகாமையாளர் காத்தமுத்து ஜெகதீஸ் கருத்துத் தெரிவித்தார்.