EU & US க்கான உயர் தொழில்நுட்ப விளையாட்டு கையுறைகளை தயாரிப்பதை லட்சியமாகக் கொண்ட புதிய முயற்சியை அறிமுகப்படுத்தும் Dipped Products
நிலையான ஒருங்கிணைந்த கையுறை உற்பத்தியில் உலகளாவிய முன்னோடிகளான Dipped Products PLC (DPL), Hayleys குழுமத்தின் துணை நிறுவனமானது, பியகமவில் உள்ள அதன் அதிநவீன உற்பத்தி ஆலையில், வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்து, துல்லியமான பொறியியல் விளையாட்டு கையுறைகளில் அதன் லட்சிய பல்வகைப்படுத்தலுக்கு ஏற்ப வணிக நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளது.
1.3 பில்லியன் ரூபா முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய வசதி கொண்ட ஆலையானது, தொழில்துறை, வீட்டு மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்கான கையுறைகளை உற்பத்தி செய்வதில் DPL இன் விதிவிலக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அதிகபட்ச செயல்திறன், பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்கும் விளையாட்டுக் கையுறைகளை வடிவமைத்து உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“DPLஇன் துல்லிய-பொறியியல் விளையாட்டு கையுறைகளின் உற்பத்தியை முறையாகத் ஆரம்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகளாவிய ரீதியில் இந்த பிரிவு 2027 ஆம் ஆண்டளவில் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் DPLக்கு குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கைக் கைப்பற்றுவதற்கான மகத்தான சாத்தியக்கூறுகளை நாங்கள் காண்கிறோம்.
எமது நாட்டின் நன்கு நிலைநிறுத்தப்பட்ட ஆடை உற்பத்தித் திறன்களை DPL இன் தொழில்சார் கைப் பாதுகாப்பில் உயர்தரம் வாய்ந்த, தரமான விளையாட்டுக் கையுறைகளை இலங்கையில் உற்பத்தி செய்வதே எமது இலக்காகும்” என DPL முகாமைத்துவப் பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர தெரிவித்தார்.
சைக்கிள் ஓட்டுதல், மவுண்டன் பைக்கிங், கோல்ஃப், பேஸ்பால் பேட்டிங், அமெரிக்க கால்பந்து, குதிரையேற்றம், குளிர்கால விளையாட்டு, ஓடுதல் மற்றும் உடற்பயிற்சி, மோட்டார் பைக்குகள் மற்றும் பளு தூக்குதல் உள்ளிட்ட தனிப்பயன் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு கையுறைகளின் 10 புதிய வகைகளை DPL முதலில் தயாரிக்கவுள்ளது.
பேண்தகைமையான அதன் முக்கிய செயல்முறையில் நெசவு செய்து, உற்பத்தியாளர் அதன் மூலப்பொருட்களில் 60% வரை உள்நாட்டிலேயே பெற நடவடிக்கை எடுத்துள்ளது – இதில் PET போத்தல்களிலிருந்து மீள்சுழற்சி செய்யப்பட்ட நூல் மற்றும் மீள்சுழற்சி செய்யக்கூடிய/உக்கக் கூடிய பேக்கேஜிங் ஆகியவை அடங்கும்.
DPL ஆனது Platinum LEED சான்றிதழைப் பின்தொடர்கிறது: இது US Green Building Council (USGBC) வழங்கும் மிக உயர்ந்த சான்றிதழாகும். USGBC ஆல் உருவாக்கப்பட்டது, LEED என்பது சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கிய செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட, பராமரிக்கப்பட்டு, இயக்கப்படும் கட்டிடங்களுக்கான உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும். LEED கட்டிடங்கள் மும்மடங்கு அடித்தளத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மக்கள், பூமி மற்றும் லாபம்-மாசுபாட்டைக் குறைத்தல், செயல்திறனை அதிகரிப்பது மற்றும் சூழல் மாசடைவைக் குறைத்தல், அதே நேரத்தில் மக்களுக்கு ஆரோக்கியமான இடங்களை உருவாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்கிறது.
அதன்படி, DPL ஆனது கழிவு நிர்வகிப்பு, மூலப் பொருட்கள், சுகாதாரம் மற்றும் உட்புற சுற்றுச்சூழல் தரம் ஆகியவற்றுடன், விரிவான நீர் சுத்திகரிப்பு மற்றும் மீள்சுழற்சி மற்றும் மழைநீர் சேகரிப்பு வசதிகளை நிறுவுதல் உட்பட – ஆற்றல் மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் நீடித்திருக்கும் தரநிலைகளை முழுமையாக மேம்படுத்துவதில் முதலீடு செய்யும்.
இந்த வசதி குறிப்பிடத்தக்க சூரிய மின் உற்பத்தி திறன்களைக் கொண்டிருக்கும், 17,000 சதுர அடி கூரையைப் பயன்படுத்தி 325 கிலோவாட்களை உற்பத்தி செய்யும் – இது வசதியின் மொத்த எரிசக்தி தேவைகளில் சுமார் 110% க்கு சமமாகும்.
1976 இல் நிறுவப்பட்டது, Dipped Products உலகின் முன்னணி இறப்பர் கையுறை உற்பத்தியாளர்களில் ஒன்றாகும் மற்றும் 5% உலகளாவிய சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. 16 மில்லியன் உற்பத்தித் திறன் கொண்ட DPL இலங்கையின் மிகப் பெரிய வீட்டுத் தேவைக்கான கையுறை உற்பத்தியாளராக உள்ளது. நிறுவனத்தின் தயாரிப்புகள் இப்போது 70 நாடுகளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.