அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
“நாட்டின் சிரமங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன், மின்சாரக் கட்டணம் அதிகம், எரிபொருளின் விலை அதிகம், ஜனவரி 1ஆம் திகதி மின்சாரத் திருத்தத்திற்கான பிரேரணையை நவம்பரில் கொடுங்கள் என்று கூறுகின்றேன்.
இப்போது ஜூலையில் திருத்தத்தில் இருந்து சில தொகை குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் 0 – 30, 30 – 60, 60 – 90 யூனிட்களுக்கு 27% மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிந்துள்ளோம்.
மின்சாரக் கட்டணத்துக்கு மேலும் உறுதியான நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும்..”
இதேவேளை, நாட்டில் உள்ள 95 ஒக்டேன் பெட்ரோல் பங்குகள் மற்றும் ஏனைய பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பல வகையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்கு பதிலளித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் இந்தியன் ஆயில் கம்பனிக்கு சொந்தமான பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
There is no shortage of Petrol 95 stocks or any other petroleum products with CPC & LIOC. Daily requirement of Petrol 95 is about 80-100 MT islandwide. There’s adequate stocks available with fuel stations & all orders placed will be distributed. The next cargo of 9000 MT of… pic.twitter.com/RAl9qOQ2Zc
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 18, 2023
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
9,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 பெற்றோலை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்றும் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.