Times Higher Education World ranking இன் படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதலாம் பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது.
டைம்ஸ் உலகத் தரவரிசை ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி அதன் மூலம் உலகின் உயர்கல்வி நிறுவனங்களின் பல்வேறு பணிகள் மற்றும் வெற்றிகளைப் பற்றிய சரியான புரிதலை வழங்குகிறது.
இது பல்கலைக்கழக நடவடிக்கைகளின் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. அந்த மூன்று பகுதிகள் ஆராய்ச்சி, செல்வாக்கு மற்றும் கற்பித்தல். அந்த மூன்று பிரிவுகளின் கீழ் அணுகும் 13 செயல்திறன் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி வகைப்படுத்தல் செய்யப்படுகிறது.
இதன்படி, Times World பல்கலைக்கழக தரப்படுத்தலின் படி இலங்கையின் 01 ஆவது பல்கலைக்கழகமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மாறியுள்ளதுடன், நான்காவது தடவையாகவும் பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் 01 ஆவது பல்கலைக்கழகமாக மாறியுள்ளமையும் விசேட அம்சமாகும்.