ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனு இன்று (15) பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த அறிவித்தலை விடுத்தார்.
இந்த மனு இன்று சோபித ராஜகருணா மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில் அழைக்கப்பட்டது.