ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பல ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக கூறியுள்ள பசில் ராஜபக்ஷ, அந்த ஜனாதிபதிகள் எவருக்கும் இல்லாத திறமையான பணியாளர்கள் தற்போதைய ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரை பசில் ராஜபக்ஷ வெகுவாகப் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் பணிப்புரை தொடர்பில் பொஹொட்டு கட்சியின் சில தலைமைகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆட்சேபனைகளை தெரிவித்தாலும், ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் பணிக்கு அது எவையும் தடையாக அமையாது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பசில் ராஜபக்ஷ இந்த விடயங்களை தெரிவித்ததுடன், எந்த நேரத்திலும் ஜனாதிபதியை தொடர்பு கொள்ள முடியும் எனினும் பிரதமர் தினேஷ் குணவர்தனவை தொடர்பு கொள்வதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.