2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மேலும் 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு 39 மையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
18 நகரங்களில் உள்ள பாடசாலைகள் விடைத்தாள் மதிப்பீட்டுப் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.
இதற்கிடையில், ஆங்கில வழி மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு அடுத்த கட்டத்தின் கீழ் தொடங்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாமதமானது.
அரசின் சமீபத்திய வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தாமதம் ஏற்பட்டது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஆகஸ்ட் மாதம் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.