follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP1'2024 ஒக்டோபர் 1ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்'

‘2024 ஒக்டோபர் 1ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’

Published on

மக்களுக்கு தேர்தல்களில் நம்பிக்கை இல்லாமல் இல்லை, மாறாக ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை இல்லை எனவும் ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு எவரும் இடமளிக்க மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்புவது அந்த நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறி ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்து செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

என்ன ஆட்டம் ஆடினாலும் ஒக்டோபர் முதலாம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும், அதற்கு ரணிலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. இந்த நாட்டில் தேர்தலை ஒத்திவைத்து ஊடகங்களை அடக்கி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனாதிபதி செயற்படுகின்றார் எனவும் அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இத்தொகுதி மாநாட்டில் அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, அதே கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல்...

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி கையிருப்பில்.. – ஜனாதிபதி

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில்...

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வழக்கு ஒன்றில்...