முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட புல்லர்ஸ் வீதியிலுள்ள வீடு தற்போது பொஹொட்டுவ அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இல்லத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய அலுவலகத்தில் இருந்து புதிய அரசியல் முன்னணியொன்றை உருவாக்குவதற்குத் தேவையான பின்னணியைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய காரியாலயத்தில் இருந்து ஆளும் கட்சியின் கூட்டத்திற்கு பொஹொட்டுவ பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொஹொட்டுவ பிரதிநிதிகளிடம் இருந்து ஏற்கனவே ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.