follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP1உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை

உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை

Published on

ஒரு வருடத்தில் அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.

யானை – மனித மோதலால் மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, இலங்கை வரலாற்றில் யானை – மனித மோதலினால் அதிகளவான யானைகள் மற்றும் மனிதர்களின் உயிர்கள் பலியாகிய ஆண்டாக 2022 ஆம் ஆண்டு காணப்படுகின்றது.

அதன்படி, 2022ம் ஆண்டு இலங்கையில் பலியாகிய யானைகளின் எண்ணிக்கை 439 மற்றும் மனித உயிரிழப்புக்கள் 148 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த வருடம் ஜூன் 2ம் திகதி வரைக்கும் யானைகளது மரணம் 193 ஆகவும் மனித உயிரிழப்புக்கள் 63 ஆகவும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானைகள் தொல்லையால், சிலர் இரவு நேரங்களில் தங்கள் குழந்தைகளுடன் மரங்களில் மிகவும் ஆபத்தான முறையில் தங்குகின்றனர்.

யானை – மனித மோதலை தீர்க்க 2023 ஆண்டு யானைகளுக்கான வேலிக்கு 350 மில்லியன் ரூபாவும், யானை வெடிகளுக்காக 180 மில்லியன் ரூபாவும் உயிர் உடமை நட்டஈடாக 120 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

யானை – மனித மோதலை தீர்க்க 64 ஆண்டுகளாக பலகோடி ரூபாய் செலவழித்தும் இதுவரை மனிதர்கள் மற்றும் யானைகள் உயிரிழப்பைக் குறைக்க முடியாமல் போனது ஏன் என்பது புதிராகவே உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்குறுதியளித்தபடி ஊழல் அரசியல் ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்த...

இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு

இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு...

இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து ஸ்மித் விலகல்

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீபன் ஸ்மித் விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த...