தொழில் நிபுணரின் கோரிக்கைக்கு அமைய என்ன வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வரித் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் இன்று ஆரம்பிக்கும் வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் தொழில் வல்லுநர்கள் சங்கம் தீர்மானம் எடுக்கும் என அதன் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தொழில் வல்லுநர்கள் எதிர்பார்க்கும் வரித் திருத்தங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.