லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.