பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேரை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
“புதிய மாணவர் குழுவிற்கு அழுகிய உணவளித்து மனிதாபிமானமற்ற சித்திரவதை” சம்பவம் காரணமாக இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவ பீடத்திற்குள் நுழைந்த புதிய மாணவர்கள் குழுவினை இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அக்பர் விடுதிக்கு அழைத்துச் சென்று, கெட்டுப்போன மற்றும் அழுகிய உணவினை சாப்பிட கொடுத்து, கடுமையாக திட்டி, தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வகுப்புத் தடை தற்காலிகமானது என்றும், முறையான விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
கடந்த 10ம் திகதி முதல் இந்த வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.