நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
Data from Islandwide Fuel Sales to Dealerships during the last 10 days shows that placement of ordered by dealerships has normalized and all products are available islandwide. pic.twitter.com/ieMD5xcD7K
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 10, 2023
தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான எரிபொருள் இருப்புக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் ஓர்டர்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டன என்பது தொடர்பிலும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நாளாந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு நிரப்பு நிலையங்களிலும் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.