ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதத்தினை எதிர்வரும் 21ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூடிய போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. நாட்டில் ஊழல், இலஞ்சம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இந்த சட்டமூலத்தினை அரசு தாக்கல் செய்ததன் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த சட்டமூலத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சபாநாயகரிடம் தெரிவித்தது.
இதேவேளை, இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகம் தீர்மானித்துள்ளது.