வறிய நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகள் இதுவரை கிடைக்காத காரணத்தால் கொரோனா தொற்று நெருக்கடி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஆப்ரிக்காவில் வெறும் 5 சதவீதம் பேருக்குதான் தடுப்பு மருந்து கிடைத்துள்ளதாகவும், இது பிற நாடுகளில் 40 சதவீதமாக உள்ளது.
பிரிட்டன் மொத்தமாக தடுப்பு மருந்து தேவைப்படும் நாடுகளுக்கு 10 கோடி தடுப்பு மருந்துகளை வழங்குவதாக தெரிவித்திருந்தது ஆனால் இதுவரை வெறும் ஒரு கோடிக்கும் மேலான தடுப்பு மருந்துகளையே வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகள் அல்லது அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கே அதிகப்படியான கொரோனா தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் ஒப்பிட்டால் ஆப்ரிக்காவில் இதுவரை 2.6 சதவீதம் டோஸ் தடுப்பு மருந்துகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டு வரை மிக இலகுவாக கொரோனா வைரஸ் தொற்று நீடிக்கக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிரேஷ்ட தலைவர், வைத்தியர் ப்ரூஸ் அல்வேர்ட் (Bruce Aylward) தெரிவித்துள்ளார்.