ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (08) மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட உள்ளது.
வடக்கில் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இராணுவத்தினருக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் தமிழ் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.