நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மேஜர் (ஓய்வுபெற்ற) சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அஜித் பிரசன்ன தற்போது அனுபவித்து வரும் 04 வருட சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் தண்டனை அமுல்படுத்தப்படும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.