முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்றி புகையிரத போக்குவரத்தை ஆரம்பிக்குமாறு புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
புகையிரத போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்படாமையினால் அரச மற்றும் தனியா் பிரிவுகளில் சேவைப்புரியும் ஊழியர்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் பிரதான செயலாளா் எஸ். டீ. விதானகே தெரிவித்துள்ளாா்.
புகையிரத சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விளக்கமளித்து அந்த ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள சகல பிரிவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் புகையிரத சேவை மாத்திரம் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது பிரச்சினைக்குரிய விடயமென்று புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போதுள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி விரைவாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி புகையிரத சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்த ஒன்றிம் அதிகாரிகளிடம் கோரியுள்ளத.