சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெறுகிறது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 22.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணி சார்பில் துடுப்பாட்டத்தில், மொஹமட் நபி 23 ஓட்டங்ளையும், இப்ராஹிம் சத்ரான் 22 ஓட்டங்களையும், அதிகபடியாக அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் துஷ்மந்த சாமீர 63 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 7 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.