வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு குரங்குக் காய்ச்சல் (Monkeypox) தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு தாயும் மகளும் குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர்கள் தற்போது IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
குறித்த குடும்பத்தின் தந்தையும் வெளி நாட்டில் குரங்குப் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து நாடு திரும்பியமை தெரிய வந்துள்ளது.
தாயும் மகளும் டுபாயில் இருந்து வந்தவர்கள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.