பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களினால் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் வடமராட்சி பிரதேசத்தில் பரீட்சை நிலையமொன்றுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் குழுவிற்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று (06) உத்தரவிட்டுள்ளது.