யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட வில்பத்து காட்டுப் படுகொலைகளை மீள் நடவு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தாத முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(06) அழைப்பாணை விடுத்துள்ளது.
1,067 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இதுவரை குறித்த தொகையை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் செலுத்தவில்லை என்பதால் சுற்றுச்சூழல் நீதி மையம் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி முன்னாள் அமைச்சருக்கு எதிராக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.