இலங்கையில் பணிபுரியும் மக்களிடம் வரி வசூலிக்கும் அரசாங்கம் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் வெளிப்படைத்தன்மை இல்லாத வேலைத்திட்டம் எனவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
உலகத் துறைமுகங்களில் இலங்கையின் கொழும்புத் துறைமுகம் 123ஆவது இடத்தில் இருப்பதாகவும் லலித் அத்துலத்முதலி அதனை 27ஆவது இடத்துக்கு எடுத்துச் சென்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
சந்திரிகாவும், மஹிந்த ராஜபக்ஷ முகாமும் வெளிநாடுகளுக்கு துறைமுகத்தின் மூன்று முனையங்களை வழங்கியது, ஆனால், துறைமுகமானது வினைத்திறனுடன் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்றும், தனியார் துறை முதலீடு முக்கியமானது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒப்புக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.