உத்தேச ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை கொண்டு வருவதற்கான யோசனை அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து இந்த நாட்டில் பத்திரிகை சுதந்திரம் என்ற நிலை முற்றாக மாறும் என இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்று மாதங்களுக்குள் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.