எதிர்வரும் பருவமழையுடன் டெங்கு நோய் பரவல் அதிகரிக்க கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் 14, 15, 16 ஆம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் 72 அலுவலகங்களை உள்ளடக்கி விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக சுகாதார அமைச்சு, ஆயுதப்படை மற்றும் காவல்துறையினரின் ஆதரவைப் பெற்றுள்ளதுடன், வீடுகளில் சோதனைகள் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.