இந்தியாவின் கிழக்கு மாகாணமான ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்துள்ள விசேட செய்தியில் இந்த விபத்து குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் தமது அண்டை நாடான இந்தியாவுடனும் அதன் சகோதர மக்களுடனும் கைகோர்த்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.
இந்த எதிர்பாராத நிகழ்வை எதிர்கொள்ளும் வலிமையையும் தைரியத்தையும் இந்திய அரசுக்கு வழங்க வேண்டும் என தாம் பிராத்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 03 ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.