மேற்கு மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகள் அடங்கிய 45 பொலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்கு மெக்சிகோவின் குவாடலஜாராவில் இந்த உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடல் உறுப்புகள் பெண் மற்றும் ஆண் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த உடல் பாகங்கள் கடந்த மே மாதம் காணாமல் போன 7 கால் சென்டர் ஊழியர்களுடையது என அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், கண்டுபிடிக்கப்பட்ட உடல் உறுப்புகள் குறித்த குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.