ஒருநாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் செலவிடும் முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள அந்த திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைககள் தொடர்பில் தரகர்கள் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.