follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP1அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது

Published on

நமது நாடு வளமான நாடாக இருந்தாலும்,தற்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும்,இந்த வங்குரோத்தில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருவதாகவும்,வட்டி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் வியாபாரங்களையும் அரசாங்கம் முடக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடு இவ்வாறான நிலையில் இருக்கும் போது தற்போதைய அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்கள் ஊடாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறிவருவதாகவும், தற்சமயம் உண்மையை மக்களிடம் கொண்டு செல்லும் சுதந்திர ஊடக நிறுவனங்கள் கூட அடக்குமுறைக்குட்படுத்த சட்டங்களைக் கொண்டு வருவதாகவும்,அச்சட்டங்களின் ஊடாக தம்மை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்களை ஒடுக்க முயற்சித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய சட்டங்கள் மூலம் மக்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தவும் தயாராகி வருவதாகவும்,இந்த சட்டமூலங்கள் மூலம் மக்களுக்கு அதிகபட்ச இடையூறுகளை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை வீழ்ந்த இடத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காத இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய(02) தினம்,அரலகங்வில தம்மின்ன பகுதியில் உள்ள மட்பாண்ட உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயச் சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு?

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் நெருக்கடியுடன், வாகனங்களின் இறக்குமதி மார்ச் 2020...

இஸ்ரேல் தாக்குதலுக்கு.. சூடாக ரெடியாகும் ஈரான்

இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஈரான் இராணுவம் ட்வீட்...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம்

இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாதுகாப்பு...