இலங்கையில் ஒரு போட்டி சுற்றுப்பயணத்திற்காக தென்னாப்பிரிக்கா ஏ கிரிக்கெட் அணி 24 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு இன்று (01) இலங்கை வந்துள்ளது.
இந்த அணி பல்லேகல மைதானத்தில் 03 ஒரு நாள் போட்டிகளிலும், தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு 04 நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ், விமான நிலையத்திலிருந்து கொழும்புக்குக் குழுவை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.