follow the truth

follow the truth

January, 13, 2025
HomeTOP1இலங்கைக்கு இறக்குமதியாகும் சில கருவாடு - பழங்களில் ஈயம் மற்றும் ஆர்சனிக்

இலங்கைக்கு இறக்குமதியாகும் சில கருவாடு – பழங்களில் ஈயம் மற்றும் ஆர்சனிக்

Published on

ஜூன் முதலாம் திகதியில் இருந்து கருவாடு மற்றும் பழங்கள் இறக்குமதியில் கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் அளவுகளை சரிபார்க்கவும், இறக்குமதி செய்யப்படும் பழங்களில் உள்ள ஈயத்தின் சதவீதத்தை சரிபார்க்க கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்குக் காரணம், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில கருவாடு, நெத்தலி, பழங்கள், போன்றவற்றில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் கலந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சின் சுற்றாடல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு சுகாதார பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் சில பழங்களில் அதிக அளவில் ஹெவி மெட்டல் ஈயம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

2021-2022 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சகத்தின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு நடத்திய தேசிய உணவுப் பாதுகாப்பு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

எனவே இலங்கைக்கு உலர் வற்றல் இறக்குமதி செய்யும் போது உலோக ஆர்சனிக் மற்றும் ஈயம் போன்ற குறைந்தளவு நச்சுப் பொருட்கள் இல்லாத உணவுப் பொருட்களை மாத்திரமே இலங்கைக்கு இறக்குமதி செய்யுமாறு சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு அவர்களுக்கு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், வர்த்தகர்கள் அல்லது நுகர்வோர் மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கத்தையும் உணவு கட்டுப்பாட்டு பிரிவு 011 211 2718 இந்த தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க...

சீனா பயணித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13) இரவு சீனாவுக்குப் புறப்பட்டுச்...

கைப்பேசி பேக்கேஜ்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை

கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர்கள் தமது கையடக்கத் தொலைபேசி பொதிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என...