சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31) நாட்டினை வந்தடையவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுரா ஜனாதிபதி, நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தவிர கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல திட்டங்களையும் அவர் கண்காணிக்க உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, நாட்டின் பொருளாதார திட்டத்தின் சமீபத்திய போக்குகள், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் தடைகள் மற்றும் தாமதங்களை குறைப்பதற்கான வழிகள் குறித்து பல சுற்று விவாதங்களில் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.