சிலோன் பிரீமியர் லீக் அறிமுக வீரர் ஏலம் ஜூன் 14ம் திகதி அன்று நடைபெற உள்ளது.
இந்த ஏலம் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முதன்மையான உள்நாட்டு T20 போட்டியில் முதன்முறையாக வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது, இதற்காக ஐந்து அணிகளுக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.
அதன்படி, ஒரு அணிக்கான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலத்தில் 500,000 அமெரிக்க டாலர்கள் தொகைக்கு உரிமை உண்டு.
சிலோன் பிரிமியர் லீக் தொடரின் 4வது பதிப்பு இவ்வருடம் நடைபெறவுள்ளதாகவும், இந்த போட்டிகள் 2023 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.