அரசாங்கத்திற்கு விசுவாசமான 10 வர்த்தகர்களின் கடன்கள் வராக் கடனாக தள்ளுபடி செய்யப்படவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டேட் வங்கிகள் மற்றும் மத்திய திரைசேரியினை தொடர்பு கொண்டு விசாரித்ததாக கூறிய அமைச்சர், மேலும் கடனை வெட்டுவது ஆபத்தான செயல் என்றும், இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் கூறினார்.
வாடிக்கையாளர்கள் அனைவரும் வங்கிக் கடனில் தவிக்கும் வேளையில் ஒரு சிலரின் கடனைத் தள்ளுபடி செய்து வருவதாகக் கூறப்படும் செய்திகள் நாட்டின் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செய்தியாகும் எனத் தெரிவித்த அமைச்சர், அவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய அவர்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேற்குறித்த கடன் தள்ளுபடி குறித்து நேற்று முன் தினம் (24) நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.