சொத்து விபரங்கள் அறிக்கையை பகிரங்கப்படுத்தி நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுமாறு தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதிகள் இவ்வாறு செயற்படும் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதை தவிர்த்து இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் திருத்தச் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றும் போதே எரான் விக்கிரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“.. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் திருத்த சட்டமூலத்தினை வழங்குதல். ஒரு நாடு மாறுவது சட்டத்தால் மட்டும் அல்ல. உதாரணமும் முக்கியமானது. தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை பகிரங்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.. இந்த சட்ட சபையில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர். அப்போது அமைச்சர்களும், அதிகாரிகளும், எம்.பி.க்களும் முன்னுதாரணமாகச் செய்ய வேண்டும். ஒரு நாடு இப்படித்தான் மாறுகிறது. ஊழலை ஒழிக்க முடியாது. குறைக்க முடியும். அமைப்பு மாற்றத்தை நாடு கோருகிறது..” எனத் தெரிவித்திருந்தார்.