இன்று (26) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அரச நிறுவனங்களும் டெங்கு ஒழிப்புக்காக 2 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
அதற்கான சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, டெங்கு பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மாகாண ஆளுநர்களின் ஒருங்கிணைப்புடன் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளீன் ஆரியரத்ன தெரிவித்தார்.
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37209 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.