தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மூட்டை இலவச யூரியா உரம் வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரை ஹெக்டேருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு இந்த யூரியா உர மூட்டை கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறுகிறார்.
இதுவரை 07 மாவட்டங்களில் அதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹெக்டேருக்கு 20,000 ரூபா வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.