ஏப்ரலில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க 45 சதவீத வாக்குகளைப் பெறுவார் என சுகாதார கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதத்தில் அவரது சதவீதம் குறைந்துள்ளது.
அநுர குமார திஸாநாயக்க பெப்ரவரியில் 51 வீதமும், ஏப்ரலில் 49 வீதமும் பெற்றிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 37 வீதமும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13 வீதமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் 6 வீதமும் பெற்றுள்ளதாக இந்த கணக்கெடுப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.