இலங்கைக்கு மற்றுமொரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத்தந்த தெற்காசியாவின் அதிவேக வீரர்
இத்தாலியில் நடைபெற்று வரும் சவோனா சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
யுபுன் அபேகோன் 100 மீற்றர் இறுதிப் போட்டியை 10.01 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற முடிந்தது.
“இந்த வருடத்தின் தொடக்கம், நான் எப்போதும் சொல்வது போல், பொறுமையாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருப்பது எதிர்காலத்தில் நல்ல பலன்களைக் காண ஒரு சிறந்த வழியாகும்.”
“10.01 (+2.7) வினாடிகளில் என்னால் 2வது இடத்தைப் பிடிக்க முடிந்தது. எனது பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.” என போட்டியின் பின்னர் யுபுன் அபேகோன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.