மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் இன்று பொரளை பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டது.
மே 18 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இருந்து ஐவரடங்கிய விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
மரணத்திற்கான காரணத்தை சரிபார்க்க தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டியது அவசியம் என கடந்த விசாரணையின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் குழு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரியவிடம் தெரிவித்திருந்தது.
விசேட நிபுணர் குழுவின் கோரிக்கைக்கு அமைய மறைந்த வர்த்தகரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
52 வயதான தினேஷ் ஷாஃப்டர் 2022 டிசம்பர் 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் தனது காரின் சாரதி ஆசனத்தில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு பொரளை பொலிஸாருடன் இணைந்து தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது.