எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரதநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, இது தொடர்பில் விடுக்கப்பட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு மக்களின் ஆதரவைப் பெறுவது உறுதி என ஜானக ரத்நாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கான பாராளுமன்ற பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனக ரத்நாயக்க, அதன் பெறுபேறு தனக்கு தெரியும் எனவும் அதற்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் தங்கள் கட்டளையின் கீழ் இருக்கும் ஒரு பொருத்தமற்ற நபரை நியமிப்பது எளிதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரதநாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.