கட்சியின் தீர்மானத்தை மீறி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வடிவேல் சுரேஷ் தவிர, குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம். ஃபௌசியும் அரசாங்கம் கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.