வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தின் கட்டளைத் தளபதியை இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்த்ராவ தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி வேறு நிலையத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
சந்தேக மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணையில் பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகள் இருக்கலாம் என்பதனால் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பணி இடைநிறுத்தம் செய்து முறையாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருத்துவ அறிக்கைகள் கிடைத்த பின்னரே சந்தேக நபரின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடொன்றில் காணாமல் போன தங்கம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரான ராஜகுமாரியை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இணைப்புச் செய்தி
ஆர்.ராஜகுமாரி : வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த பணிப்பெண் தாக்குதலால் கொல்லப்பட்டாரா?