வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று கூறி பணம் பெறுவது தற்போது புத்திசாலித்தனமான திருட்டுத்தனமாக மாறியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போது கொரியா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்படும் மோசடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்று சிரமத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சமூகம் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் தெரிந்தோ தெரியாமலோ வெளிநாட்டு வேலைவாய்ப்புப் போக்குவரத்தில் மக்கள் சிக்கிக் கொள்கின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.
“வேலையை எதிர்பார்த்து தவறான வழியில் வெளியூர்களுக்குச் சென்றவர்கள், பிரச்சினையில் சிக்கிய பின் தூதரகங்கள் முன் வந்து விமர்சிகிறார்கள். வேணாம் என்று எவ்வளவு சொன்னாலும் சுற்றுலா விசா எடுத்து வேலைக்குச் செல்கிறார்கள். போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு அரசுப் பணத்தில் மீண்டும் நாடு திரும்புகின்றனர்..” என அமைச்சர் தெரிவித்திருந்தார்.