2022ம் கல்வியாண்டுக்கான சாதாரண தர பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது.
பரீட்சை திணைக்களத்தின் உத்தரவை மீறி யாராவது செயற்பட்டால், 1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் அவ்வாறானவர்கள் குற்றவாளிகளாவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கையொப்பமிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ம் கல்வியாண்டுக்கான சாதாரண தர பரீட்சை மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை 3,568 பரீட்சை மையங்களில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.