தற்போதுள்ள எரிபொருள் கோட்டாவில் மாற்றம் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை தொடர்ந்து பராமரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்யும் திறன் ஆகியவற்றை கருத்திற்கொண்டு எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை பேண உத்தேசித்துள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.