இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை விரிவுபடுத்தும் நோக்கில் அந்நாட்டில் உள்ள கோழிப்பண்ணையை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது.
இந்தியாவின் சென்னையில் உள்ள பல கோழிப் பண்ணைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளனர்.
இந்தியாவில் உள்ள 03 கோழிப்பண்ணைகளில் இருந்து இலங்கைக்கு முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், போதிய அளவு இல்லாததால், சில புதிய பண்ணைகளை அடையாளம் காண்பதே இந்த விஜயத்தின் நோக்கமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நாளாந்தம் சுமார் ஒரு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.