தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள படைவீரர்களை நினைவுகூர்வதற்கான சதுக்கத்தில் இன்று (19) நடைபெற்றது.
மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் இராணுவத்தினர் வெற்றிகொண்டு 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
யுத்தத்தில் இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுக்காப்பு படைகளை சேர்ந்த 28,619 படையினர் உயிர் நீத்தனர். 27,000 இற்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் இராணுவ சேவை அதிகாரசபையினால் 2023 படைவீரர் நினைவு தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து மத வழபாடுகளுடன் ஆரம்பமாகிய நிகழ்வு நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்காக உயிர்தியாகம் செய்த இராணுவ, விமானப்படை, கடற்படை ,பொலிஸ், மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களை கௌரவிப்பதற்கான வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.