இத்தாலியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் உள்ள சுமார் 20 ஆறுகளில் வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 280 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.
இதனால் பெருமளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.